10 வீரர்கள் போதுமா? நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி

இந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அணியில் இருந்து நேற்று என் ஜெகதீசன் நீக்கப்பட்டார்.

10 வீரர்கள் போதுமா? நேற்று சிஎஸ்கேவையும் சேர்த்து குழப்பிய தோனி

நேற்று சிஎஸ்கேவில் பியூஸ் சாவ்லா ஏன் அணியில் எடுக்கப்பட்டார் என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஒரே ஒரு ஓவர் கொடுப்பதற்கு இவரை அணியில் ஏன் எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக வெற்றிபெற்றது. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஆட்டம் சிஎஸ்கேவின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

17-18 ஓவர்களில் ஆட்டம் எங்கே கையைவிட்டு போய்விடுமோ என்றுதான் சிஎஸ்கே ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் கடைசியில் பவுலர்கள் நிகழ்த்திய மேஜிக் காரணமாக சிஎஸ்கே கடைசி நொடியில் மீண்டது. 

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. 

இந்த போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அணியில் இருந்து நேற்று என் ஜெகதீசன் நீக்கப்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு பவுலருடன் சிஎஸ்கே களமிறங்கியது. பியூஸ் சாவ்லா நேற்று அணியில் எடுக்கப்பட்டார். 

நேற்று போட்டியில் பிட்ச் பவுலிங் செய்ய வசதியாக இருக்கும், முக்கியமாக ஸ்பின் பவுலிங் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் பியூஸ் சாவ்லா கொண்டு வரப்பட்டார். இவர் நேற்று போட்டியில் கேம் சேஞ்சாராக இருப்பார் என்றும் கருதப்பட்டது. இவரை வைத்து சிஎஸ்கே அதிக விக்கெட்டுகளை எடுக்கும், கரன் சர்மா வேறு இருப்பதால் ஆட்டமே மாறும் என்று கருதப்பட்டது. ஆனால் சிக்கல் ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று தோனி பியூஸ் சாவ்லாவை பயன்படுத்தவில்லை. 

15 ஓவர்கள் வரை நேற்று பியூஸ் சாவ்லா பவுலிங் செய்ய களத்திற்கு வரவே இல்லை. 16வது ஓவரை மட்டுமே சாவ்லா போட்டார். அந்த ஒரு ஓவர் மட்டுமே சாவ்லா வீசினார். அதில் 8 ரன்கள் மட்டும் கொடுத்தார். அதன்பின் டெத் ஓவர்களில் சாவ்லா வீசவில்லை. 

நேற்று சாவ்லா பேட்டிங் செய்யவில்லை. ஒரே ஒரு ஓவர்தான் பவுலிங் செய்தார். இப்படி இருக்கையில் இவரை அணியில் எடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. தோனியின் முடிவு சிஎஸ்கேவினரையும் நேற்று குழப்பியது. ஒரே ஒரு ஓவர் கொடுக்க சாவ்லாவை ஏன் களமிறக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

நேற்று பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனாலும் சாவ்லாவை தோனி களமிறக்கவில்லை. இதனால் தோனியின் முடிவை பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அணி தேர்வை தோனி சுயநினைவோடுதான் செய்கிறாரா என்று சந்தேகப்பட்டுள்ளனர். 

ஒரே ஒரு ஓவர் கொடுக்க பியூஸ் சாவ்லா எதற்கு.. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நேற்று சிஎஸ்கே 10 வீரர்களோடுதான் விளையாடி உள்ளது.. பியூஸ் சாவ்லாவை கணக்கில் எடுக்க கூடாது. ஜெகதீசன் தோனி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று பலரும் இணையத்தில் கேட்டுள்ளனர். 

இன்னொரு பக்கம் இப்படி சாவ்லாவை அணியில் எடுத்துவிட்டு பயன்படுத்தாமல் இருப்பதற்கு பதிலாக ஜெகதீசனை களத்திற்கு அனுப்பி இருக்கலாம். சிஎஸ்கேவிற்கு கூடுதலாக ஒரு பேட்டிங் வாய்ப்பாவது இருந்திருக்கும். ஆனால் அதையும் தோனி செய்யவில்லை என்று விமர்சனம் வைத்துள்ளனர்.