கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி!
சென்னையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் வரும் 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.
சென்னையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலியும் சென்னை வந்துள்ளார். அவர் தனது 6 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட உள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் வரும் 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் இரு பிரிவுகளாக சென்னை வந்துள்ளனர்.
முன்னதாக நேற்றைய தினம் ரோகித், ரஹானே மற்றும் தாக்கூர் ஆகியோர் சென்னை வந்தநிலையில் இன்றைய தினம் கேப்டன் விராட் கோலி சென்னை வந்துள்ளார்.
இதே போல கடந்த 22ம் திகதி பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்த நிலையில் இன்றைய தினம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.