தோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..!

ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் நேற்று சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோனிகிட்ட அதமட்டும் வச்சிக்க கூடாது.. கைக்கொடுத்த கவாஸ்கரின் அட்வைஸ்..!

எம்.எஸ்.தோனியுடன் மோதுவது குறித்து ரிஷப் பண்ட்-க்கு முன்னாள் வீரர் கவாஸ்கர் வித்தியாசமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் நேற்று சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவருக்கு கவாஸ்கர் வழங்கியுள்ள அட்வைஸ் அனைவராலும் உற்று நோக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி அனைவருக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு காரணம் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி அணி விளையாடியது தான். 
ஐபிஎல்-ல் முதல் முறையாக கேப்டன்சி செய்த பண்ட் - 13 ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் எம்.எஸ்.தோனியை எதிர்கொண்டார். இந்த போட்டி குரு - சிஷ்யனுக்கு இடையேயானதாக பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி அசால்ட்டாக வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த ரெய்னாவின் அரை சதம் மற்றும் மொயின் அலியின் அதிரடி கை கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. பண்ட்- பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஜோடியே அதிரடி காட்டியது. ப்ரித்வி ஷா 72 ரன்களும், ஷிகர் தவான் 85 ரன்களும் எடுத்து டெல்லி அணியை சுலபமாக வெற்றி பெற செய்தனர். இதனிடையே போட்டிக்கு முன்னர் கவாஸ்கர் கூறிய அறிவுரையை பண்ட் சரியாக பயன்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

பண்ட்-க்கு அறிவுரை கூறி இருந்த கவாஸ்கர், டாஸின் போது சமூக இடைவெளி ஏதும் இல்லை என்றால், தோனியை மட்டும் பண்ட் தோளில் கைப்போட விட்டுவிடக்கூடாது. அது, நான் பெரியவன்.. சிறுவன் நீ என்னை எதிர்த்து நிற்கிறாயா என்பதை குறிக்கும். அது பண்ட்-க்கு சிறிய அச்சுறுத்தலையும், தேவையில்லாத பதற்றத்தையும் உருவாக்கும்

தோனியிடம் இருந்து ரிஷப் பண்ட் சற்று விலகியே இருக்க வேண்டும். பண்ட்- தோனி மீது நிறைய மரியாதை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே. 

எனினும் அவை களத்திற்கு வெளியில் இருக்க வேண்டுமே தவிர போட்டியின் போது யாராக இருந்தாலும் ஒரே மாதிரி ஆக்ரோஷமாக எதிர்த்திட வேண்டும் என தெரிவித்திருந்தார். இவர் கூறியதை போலவே நேற்று பண்ட் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை வென்றுள்ளார்.