இப்படியா ஆடுவாங்க? இவரால் தான் மொத்த விக்கெட்டும் போச்சு..!

ரஹானே 70 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதன் பின் மற்ற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

இப்படியா ஆடுவாங்க? இவரால் தான் மொத்த விக்கெட்டும் போச்சு..!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் பின்னடைவை சந்தித்தது.

ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் குறைவாகவே எடுத்தது இந்திய அணி. அதனால், இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையும் நிலையும் உருவாகி உள்ளது.

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா விக்கெட்களை இழக்க ரன் எடுக்காமல் ஆமை வேக ஆட்டம் ஆடிய புஜாரா தான் என கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 338 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

85 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த இந்திய அணி அதன் பின் புஜாரா - ரஹானேவின் ஆமை வேக ஆட்டத்தால் ரன் குவிக்காமல் ஓவர்களை மட்டும் கடத்தி வந்தது.

ரஹானே 70 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதன் பின் மற்ற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

அதற்கு காரணம் புஜாரா அப்போது ரன் எடுக்கவோ, ஷாட் ஆடவோ முயற்சி செய்யாமல் தடுப்பாட்டம் ஆடியது தான் என முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

புஜாரா இந்தப் போட்டியில் அரைசதம் அடித்தார். ஆனால், 50 ரன்களை எட்ட அவர் 174 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன் பின் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 176 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்ததுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இந்த அரைசதம் தான் புஜாராவின் டெஸ்ட் கேரியரில் மிக மெதுவான அரைசதம். அவரது ஸ்ட்ரைக் ரேட் 28.41 மட்டுமே. அவர் ரன் எடுக்காமல் இருந்ததால் மற்ற வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு விக்கெட்களை இழந்ததாக புகார் எழுந்துள்ளது. அவர் மீது இப்படி புகார் எழுவது முதல் முறையல்ல.