அவர் இல்லையென்றால் என்ன? மும்பை அணியில் பெரிய ட்விஸ்ட்...ஃபுல் ஃபார்மில் ஒரு ஆள் ரெடி..! 

இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களில் மிக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

அவர் இல்லையென்றால் என்ன? மும்பை அணியில் பெரிய ட்விஸ்ட்...ஃபுல் ஃபார்மில் ஒரு ஆள் ரெடி..! 

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அறிவிப்பு மும்பை அணிக்கு ஷாக் கொடுத்துள்ளது.

ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களில் மிக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மும்பையில் இருந்து ஜேம்ஸ் பாட்டின்சன், நாதன் கவுண்டர் நைல், மிட்சல் மெக்லாங்கன், லசித் மலிங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பவுலர்கள் ஆகும். அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட நீக்கப்படவில்லை.

மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரராக குயிண்டன் டிக்காக் மற்றும் ரோகித் ஷர்மா இரங்கி வருகின்றனர். ஆனால் ஏப்ரல் மாதம் குயிண்டன் டிகாக் பாகிஸ்தான் உடனான தொடரில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் தாமதமாக இந்தியா வந்தாலும் கொரோனா தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார். தொடரின் மத்தியிலேயே அவர் அணியில் சேர முடியும்.

டிக் காக்கிற்கு பதிலாக மும்பை அணியில் கிறிஸ் லின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மும்பை அணியில் சேர்க்கப்பட்ட கிறிஸ் லின்-க்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
இந்நிலையில் இந்தாண்டு அவர் மும்பைக்காக முதன் முறையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஷ் லீக்கில் கிறிஸ் லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 13 போட்டிகளில் விளையாடிய அவர் 154.73 ஸ்ரைக் ரேட்டுடன் 458 ரன்கள் குவித்தார். 

இதனால் அவர் மும்பை அணிக்காக முழு உடற்தகுதியுடன் களமிறங்கவுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளிலும் அவர் கொல்கத்தா அணியில் இருந்த போது சிறப்பாக ஆடியுள்ளார்.