கோலிக்கே இதுதான் கதி.. இரக்கம் காட்டாத 2020.. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத நிலைமை!

2020ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக பலரும் வர்ணித்து வரும் நிலையில் விராட் கோலியும் அதற்கு பலிகடா ஆகி உள்ளார்.

கோலிக்கே இதுதான் கதி.. இரக்கம் காட்டாத 2020.. கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத நிலைமை!

கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்காமல் ஆண்டை முடித்துள்ளார்.

வருடம் தோறும் சதம் அடித்து தள்ளிய அவர் 2020ஆம் ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இந்த ஆண்டு இந்திய அணி குறைந்த போட்டிகளில் தான் ஆடியது என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த ஆண்டில் விராட் கோலி 22 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். நியூசிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இதில் அடக்கம்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விராட் கோலி 7 போட்டிகளில், 8 இன்னிங்க்ஸ் ஆடி, அதில் நான்கு அரைசதம் அடித்துள்ளார். இது நல்ல பேட்டிங் ரெக்கார்டு தான். 

இந்த ஆண்டு முழுவதும் சேர்த்து அவர் ஏழு அரைசதம் அடித்துள்ளார். எனினும், எப்போதும் சதம் அடிக்கும் அவர், இந்த ஆண்டில் சதம் அடிக்கவில்லை என்பது அதிர்ச்சி செய்தியாக மாறி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் விராட் கோலி 7 சதம் அடித்து இருந்தார்.

2020ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக பலரும் வர்ணித்து வரும் நிலையில் விராட் கோலியும் அதற்கு பலிகடா ஆகி உள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0