ஸ்ரீசாந்த்துக்கு செம பதிலடி கொடுத்த இளம் வீரர்.. தரமான சம்பவம்!

ஆறாவது ஓவரின் முதல் பந்தை வீசினார் ஸ்ரீசாந்த். அவுட்சைடு ஆஃப்-ஸ்டம்ப்பு திசையில் வந்த அந்த பந்தை யாஷஸ்வியால் அடிக்க முடியவில்லை.

ஸ்ரீசாந்த்துக்கு செம பதிலடி கொடுத்த இளம் வீரர்.. தரமான சம்பவம்!

மும்பை அணிக்கு எதிரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் லீக் போட்டியில் கேரளா அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டார். 37 வயதாகும் அவர் ஏழு ஆண்டுகள் தடைக்கு பின் கேரளா அணியில் இணைந்து ஆடும் முதல் கிரிக்கெட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லீக் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆதித்யா தாரே 42 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்களும் குவித்தனர். இதில் யாஷஸ்வி பெரும்பாலான ரன்களை ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் தான் எடுத்தார்.

ஆறாவது ஓவரின் முதல் பந்தை வீசினார் ஸ்ரீசாந்த். அவுட்சைடு ஆஃப்-ஸ்டம்ப்பு திசையில் வந்த அந்த பந்தை யாஷஸ்வியால் அடிக்க முடியவில்லை. இதை அடுத்து ஸ்ரீசாந்த் தேவையின்றி அவரை முறைத்துப் பார்த்து சீண்டினார்.

அதற்கு அடுத்த பந்திலேயே யாஷஸ்வி சரியான பதிலடி கொடுத்தார். ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார் அந்த இளம் வீரர். ஸ்ரீசாந்த் அந்த ஓவரில் ரன்களை வாரி வழங்கினார்.

ஸ்ரீசாந்த் இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களில் 47 ரன்களை வாரிக் கொடுத்தார். மும்பை 197 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த போதும் கேரளாவின் இளம் வீரர் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் கடந்து, 54 பந்துகளில் 137 ரன்கள் குவித்து கேரளா அணியை வெற்றி பெற வைத்தார்.