‘இங்கிலாந்தை வீழ்த்தவும் உறுதுணையாக இருக்க வேண்டும்’

இந்திய – இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன.

‘இங்கிலாந்தை வீழ்த்தவும் உறுதுணையாக இருக்க வேண்டும்’

இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக மேற்கொண்ட அவுஸ்திரேலிய விஜயம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவ்வாறே இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பிரகாசித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் எதிர்பார்ப்பில் இருப்பதாக முகமது ஸிராஜ் கூறியுள்ளார்.

இந்திய – இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெப்ரவரி 5 ஆம் திகிதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.

தாய் நாட்டுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாக முகமது ஸிராஜ் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் பிரகாசித்தது போன்று சொந்த மண்ணிலும் பிரகாசித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதே இங்கிலாந்து அணி வீரர்களின் இலக்காக உள்ளது.

புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டதாக முகமது ஸிராஜ் கூறியுள்ளார். பும்ரா, ஸமி, சர்துல் சாகுர் ஆகியோருடன் இணைந்து பந்துவீசியமை மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இஸாந்த் சர்மாவுடன் இணைந்து பந்துவீச ஆர்வமாக இருப்பதாகவும் முகமது ஸிராஜ் தெரிவித்துள்ளார்.