டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்... எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா?

இந்நிலையில் டக் அவுட்டான கடுப்பில் உள்ள விராட் கோலிக்கு, இங்கிலாந்து முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான் தெரிவித்துள்ள கருத்து மேலும் எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளது.

டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்... எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா?

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் டக் அவுட்டான கடுப்பில் உள்ள கோலிக்கு, க்ரீம் ஸ்வான் கூறியுள்ள வார்த்தைகள் மேலும் கடுப்பாக்கியுள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங்கில் திணறி வருகிறது. அணியின் கேப்டன் விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் டக் அவுட்டான கடுப்பில் உள்ள விராட் கோலிக்கு, இங்கிலாந்து முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான் தெரிவித்துள்ள கருத்து மேலும் எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்து முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் சேர்த்தது. 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில், புஜாரா, ரஹானே, அஷ்வின் என அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். தொடக்க வீரர் ரோகித் சர்மாவின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி ஸ்கோர் சற்று உயர்ந்தது.

அணியின் ஸ்கோரை உயர்த்த அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். மொத்தம் 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி, பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சரில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெடில் 12வது முறையாகக் கோலி டக் அவுட்டானார்.

முன்னதாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது கோலிக்கும், ஸ்டோக்ஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த முகம்து சிராஜை பென் ஸ்டோக்ஸ் சீண்டியதாகவும், இதனால் விராட் கோலி பென் ஸ்டோக்ஸுடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விராட் கோலியின் டக் அவுட் குறித்து பேசிய க்ரீம் ஸ்வான், கோலிக்கு எதிரான போட்டியில் ஸ்டோக்ஸ் வென்றுவிட்டார். வாழ்த்துக்கள் ஸ்டோக்ஸ். விராட் கோலி வந்த வேகத்தில் ரன் எடுக்க வேண்டும் என நினைப்பார். 

இந்த முறை அவரின் கணக்கு பொய்யாகி அவுட்டாகி விட்டார் என தெரிவித்தார். க்ரீம் ஸ்வான் ஏற்கனவே ஸ்டோக்ஸுடனான கோலியின் செயல் சின்னபுள்ளை தனமாக இருந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.