ருத்ர தாண்டவம்.. அரண்டு போன கொல்கத்தா.. மானத்தை காப்பாற்றிய ஏபிடி

அவர் ஆடிய 33 பந்துகளில் கொல்கத்தா அணி அரண்டு போனது. 16வது ஓவர் முதல் ஓவருக்கு 16, 17, 19 என ரன்களை குவித்துத் தள்ளினார் டி வில்லியர்ஸ். 

ருத்ர தாண்டவம்.. அரண்டு போன கொல்கத்தா.. மானத்தை காப்பாற்றிய ஏபிடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 194 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 170 - 180 ரன்களை எட்டுவதே கடினம் என்ற நிலையில் ஆடி வந்தது. 

கோலி உட்பட பெங்களூர் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க முடியாமல் திணறி வந்தனர். ஏபி டிவில்லியர்ஸ் தாண்டவம் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த சுற்றின் 28வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 200 ரன்களை கடக்கும் இந்தப் போட்டி நடைபெற்ற ஷார்ஜா மைதானத்தில் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என்பதால் பெங்களூர் அணி எப்படியும் 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக ஆடினர் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். 

துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் - தேவ்தத் படிக்கல் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ரன் சேர்த்தனர். அவர்கள் பேட்டிங் செய்த வரை 8 ரன்களுக்குள்ளேயே ரன் ரேட் இருந்தது. தேவ்தத் 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 

200 ரன்கள் எடுக்க வேண்டிய மைதானத்தில் பின்ச் நிதான ஆட்டம் ஆடி வந்தார். அவருடன் சேர்ந்த விராட் கோலி, அவரை விடவும் மோசமாக ஆமை வேகத்தில் ஆடி அதிர்ச்சி அளித்தார். பின்ச் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் வந்த உடன் தான் பெங்களூர் அணிக்கு திருப்பம் கிடைத்தது. 16வது ஓவர் முதல் அடித்து ஆடத் துவங்கினார் டி வில்லியர்ஸ். கோலி தன்னால் அதிரடியாக ரன் எடுக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, டி வில்லியர்ஸ் அதிக பந்துகளை சநதிக்கும் வகையில் ஆடினார். 

கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி 46 பந்துகளை சந்தித்தது. இதில் டிவில்லியர்ஸ் மட்டுமே 33 பந்துகளை சந்தித்தார். அவர் ஆடிய 33 பந்துகளில் கொல்கத்தா அணி அரண்டு போனது. 16வது ஓவர் முதல் ஓவருக்கு 16, 17, 19 என ரன்களை குவித்துத் தள்ளினார் டி வில்லியர்ஸ். 

33 பந்துகளில் 73 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் அவர். 5 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார். விராட் கோலி 28 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் டி வில்லியர்ஸ் போல எளிதாக பவுண்டரி அடிக்க முடியவில்லை. வெறும் ஒரு ஃபோர் மட்டுமே அடித்து இருந்தார் அவர். 
பெங்களூர் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழந்து 194 ரன்கள் குவித்து இருந்தது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி 170 ரன்களை எட்டுவதே பெரிய விஷயமாக இருந்தது. டி வில்லியர்ஸ் இருந்ததால் பெங்களூர் அணி பெரிய ஸ்கோரை எடுத்தது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0