முதல்ல போய் ஃபீல்டிங் கத்துக்கிட்டு வாங்க...கடுப்பான கவாஸ்கர்!

குறிப்பாக, பவுலர் பந்துவீசிய பிறகு தன்னை நோக்கி கேட்ச் வந்தால் (caught and bowled) அதையும் பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். 

முதல்ல போய் ஃபீல்டிங் கத்துக்கிட்டு வாங்க...கடுப்பான கவாஸ்கர்!

பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் அடித்ததற்கு, இந்தியர்களின் மோசமான ஃபீல்டிங்கே காரணம் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா சறுக்கியது இரண்டு விஷயத்தில் தான். ஒன்று, டாஸ், மற்றொன்று ஃபீல்டிங். இந்த இரண்டு விஷயங்கள் தான், இங்கிலாந்து 550 ரன்களுக்கு மேல் அடித்திருப்பதற்கு காரணம்.

மற்றபடி குல்தீப்பை சேர்க்கவில்லை, ஷாபாஸ் நதீமை சேர்த்திருக்கக் கூடாது, 3 ஃபாஸ்ட் கொண்டு விளையாடியிருக்க வேண்டும் போன்ற எக்ஸ்பெர்ட்ஸ் பாயிண்ட்ஸ் எல்லாம் அப்புறம் தான். 

இந்த ஃபிளாட் பிட்சில் டாஸ் தோற்றது மட்டுமில்லாமல், மோசமாக ஃபீல்டிங் செய்ததே இங்கிலாந்தின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், "வீரர்கள் தங்கள் வலைப் பயிற்சியில் புல் ஷாட், கட் ஷாட் அடிப்பதை மட்டும் கற்றுக் கொள்வதோடு இருந்துவிடக் கூடாது. ஃபீல்டிங் கோச் இன்னும் நிறைய பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

குறிப்பாக, பவுலர் பந்துவீசிய பிறகு தன்னை நோக்கி கேட்ச் வந்தால் (caught and bowled) அதையும் பிடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். 

நாம் சில அற்புதமான caught and bowled வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறோம். வீரர்கள் இதை எப்படி பயிற்சி மேற்கொள்வார்கள் என்று தெரியாது. ஆனால், அவர்கள் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் இரண்டு கேட்ச் ஆபத்திலிருந்து தப்பித்து தான் 82 ரன்கள் எடுத்தார். ஸ்டோக்ஸ் கொடுத்த caught and bowled கேட்ச் வாய்ப்பை அஷ்வின் தவறவிட, மற்றொரு சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 218 ரன்களும், சிப்லே 87 ரன்களும், ஸ்டோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் இஷாந்த், பும்ரா, அஷ்வின், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.