மைதானத்திலேயே காதலை சொன்ன தீபக் சஹார்.. அரங்கம் அதிர உற்சாகம்.. பெண் கூறிய சுவாரஸ்ய பதில்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், ஒரு பெண்ணிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர் தீபக் சஹார், ஒரு பெண்ணிடம் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி சொதப்பியது.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த போதும், அந்த அணியின் வீரர் தீபக் சஹார் செய்த விஷயம் அனைவரின் மனதையும் வென்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு திடீரென ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்ற தீபக் சஹார் அங்கிருந்த அயல்நாட்டு பெண்மணி ஒருவரிடம், தான் வைத்திருந்த மோதிரத்தை நீட்டி, மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். இதனால் அரங்கமே திடீரென ஆச்சரியப்பட்டது. மேலும் அனைவரும் அந்த பெண்மணி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த இளம் பெண் தீபக் சஹாரின் காதலை ஏற்றுக்கொண்டார். மேலும் அவர் கையில் வைத்திருந்த மோதிரத்தை பெற்றுக்கொண்டார். அவர்கள் இருவரும் கட்டியணையத்ததும், அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகமூட்ட, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக இது மாறியது.