"இனிமே இவர்தான் அணித்தலைவர்".. சிஎஸ்கேவிற்கு இரவோடு இரவாக சென்ற மெசேஜ்!

கடைசி மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இன்னொரு பக்கம் மூத்த வீரர் கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக ஆடி அதிர்ச்சி கொடுத்தார்.

"இனிமே இவர்தான் அணித்தலைவர்".. சிஎஸ்கேவிற்கு இரவோடு இரவாக சென்ற மெசேஜ்!

சிஎஸ்கே அணியில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கும் வீரர் ரூத்துராஜ் கெய்க்வாட். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக கடைசி மூன்று போட்டிகளில் இவர்தான் ஓப்பனிங் இறங்கினார்.

கடைசி மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இன்னொரு பக்கம் மூத்த வீரர் கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக ஆடி அதிர்ச்சி கொடுத்தார்.

ஜாதவ், ரூத்துராஜ் கெய்க்வாட் இரண்டு பேருமே முதல் தர போட்டிகளில் மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறார்கள். அங்கு இவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரில் யார் மஹாராஷ்டிரா கேப்டன் என்று கேள்வி எழுந்தது.

ஜாதவ், ரூத்துராஜ் கெய்க்வாட் இடையே இதற்காக போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் திடீரென ராகுல் திரிப்பாதி மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் ஆனார். 

ஆனால் மஹாராஷ்டிரா அணி இதில் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கும் யார் மஹாராஷ்டிரா கேப்டன் என்று கேள்வி எழுந்தது.

இதற்கு கேதார் ஜாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கடைசியில் ரூத்துராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முன்னாள் சிஎஸ்கே வீரருக்கும் தற்காலிக சிஎஸ்கே வீரருக்கும் இடையே இதனால் கடுமையான உரசல் ஏற்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்க ரூத்துராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்தது சிஎஸ்கே அணிக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது. தங்கள் அணியின் ஓப்பனிங் வீரர் இப்படி கேப்டனாக நியமிக்கப்படுவது சந்தோசம். இது அவருக்கு பெரிய அனுபவத்தை கொடுக்கும்.

சிஎஸ்கேவில் விளையாடும் போது இது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொடுக்கும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்புகிறது. இன்னொரு பக்கம் ஜாதவின் எதிர்காலம் முதல்தர போட்டிகளிலும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. முதல் தர போட்டிகளில் ஜாதவ் விரைவில் ஓரம்கட்டப்பட வாய்ப்புகள் உள்ளது.

like
1
dislike
0
love
0
funny
0
angry
1
sad
0
wow
1