இனிமே மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஆட மாட்டார்.. விடைபெற்ற மலிங்கா.. காரணம் என்ன ?
அந்த அளவுக்கு அவர் மீது மதிப்பு வைத்துள்ளது அந்த அணி. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மலிங்கா பங்கேற்கவில்லை.
இலங்கை அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளரான லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்த டி20 லீக் விளையாட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதை அடுத்து அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2009ஆம் ஆண்டில் இருந்து பங்கேற்று வருகிறார் லசித் மலிங்கா. இடையே ஓராண்டு அவரை ஏலத்தில் எடுக்காத போதும் அவரை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக தொடர வைத்து, அதற்கு அடுத்த ஆண்டு அவரை ஏலத்தில் வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
அந்த அளவுக்கு அவர் மீது மதிப்பு வைத்துள்ளது அந்த அணி. கடந்த 2020 ஐபிஎல் தொடரில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மலிங்கா பங்கேற்கவில்லை. 2021 ஐபிஎல் தொடரும் கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில் தான் நடைபெற உள்ளது.
எனவே, தான் இனி பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கப் போவதில்லை என தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் மலிங்கா.
இதை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், அந்த அணியின் தற்போது வேகப் பந்துவீச்சு பலமாக இருப்பதால் அவரது பிரிவு சரியான நேரத்தில் நடந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்., மலிங்காவை அடுத்த சீசன் முதல் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அவர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா வர மாட்டார் என்பதால் அதற்கு அடுத்த ஆண்டு முதல் அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையக் கூடும்.