வாக்கு கொடுத்ததை செய்துகொடுத்த கேப்டன் தோனி.. மும்பைக்கு கிளம்பியது சி.எஸ்.கே.. அடுத்த ப்ளான் என்ன?

எனவே தற்போது மும்பைக்கு செல்லும் சென்னை அணி அங்கு ஒரு மாத காலம் இருக்க திட்டம் போட்டுள்ளது. ரெய்னா உள்ளிட்ட வீரர் மும்பைக்கு நேரடியாக வருகை தந்து வருகின்றனர்.

வாக்கு கொடுத்ததை செய்துகொடுத்த கேப்டன் தோனி.. மும்பைக்கு கிளம்பியது சி.எஸ்.கே.. அடுத்த ப்ளான் என்ன?

14வது ஐபிஎல் தொடர் கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த முறை இந்தியாவில் ஏப்.9ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அணிகளுக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஏற்கனவே ஹோம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ள தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி, தனது பயிற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடந்த சீசனில் மிக மோசமாக விளையாடி தொடரில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே அணி இந்த முறை கம்பேக் கொடுப்பதற்காக மார்ச் 8ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வந்தது. 

இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற கிளம்பிவிட்டது சென்னை அணி.

கொரோனா காரணமாக இந்த முறை மொத்தமாக 6 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். 

எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. எனவே சென்னை அணி தனது முகாமை மு வரும் 26ம் தேதிக்குள் மும்பைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. ஏனென்றால் சி.எஸ்.கே அணியின் முதல் 5 லீக் போட்டிகள் மும்பையில்தான் நடைபெறுகிறது.

சென்னை அணி தனது முதல் போட்டியாக ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸுடன் மோதுகிறது. பின்னர் ஏப்ரல் 16ம் தேதி பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 19ம் தேதி ராஜஸ்தான் அணி, ஏப்ரல் 21 கொல்கத்தா அணி, ஏப்ரல் 25ம் தேதி பெங்களூர் அணியுடனும் மோதுகிறது. 

எனவே தற்போது மும்பைக்கு செல்லும் சென்னை அணி அங்கு ஒரு மாத காலம் இருக்க திட்டம் போட்டுள்ளது. ரெய்னா உள்ளிட்ட வீரர் மும்பைக்கு நேரடியாக வருகை தந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தொடருக்கு மிகவும் முன்னதாகவே பயிற்சியை தொடங்கியது நல்ல பயனுள்ளதாக இருந்தது. மும்பையில் மேலும் 4 அல்லது 5 நாட்கள் பயிற்சி நடைபெறும். 

கடந்த சீசன் முடிந்த பிறகு தோனி என்னிடம் தான் மார்ச் மாதமே வருகை தந்து ஐபிஎல்-க்கு ஆயத்தமாவேன் என கூறினார். கூறியது போலவே இந்தாண்டு சரியாக வந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த கேப்டன். நாங்கள் இந்த முறை சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.