இதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை வெளியிட்ட கோலி

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் தேர்வு செய்ததற்கான பின்னணி குறித்து கோலி விளக்கமளித்துள்ளார்.

இதுதான்பா என்னோட பிளான்... டாஸுக்கு பின்னால் உள்ள ஸ்கெட்சை வெளியிட்ட கோலி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் பேட்டிங் தேர்வு செய்ததற்கான பின்னணி குறித்து கோலி விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி இதுவரை தொடர்ந்து 9 போட்டிகளில் டாஸ் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய கோலி, சென்னை பிட்ச்சானது 2வது நாள் முதல் மிகவும் ஸ்லோவாக இருக்கும் எனக்கூறினார். இதனால் முதலில் பேட்டிங் செய்து முடிந்தவரை ரன்களை சேர்க்க விரும்புவதாகவும், அதன் பிறகு பந்துவீச்சுக்கு ஏற்றவாறு பிட்ச் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் முதல் பந்து முதலே நல்ல ஸ்விங்கிங் உள்ளது. முதல் டெஸ்டில் நடந்தது போல இது செம்மண் பிட்சாக இல்லாமல் களிமண் சேர்க்கப்பட்டு பந்துவீச்சுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் இங்கிலாந்துக்கு சிறிது நெருக்கடியாக இருக்கலாம்.

முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்திய அணியில் ரோகித் ஷர்மா மட்டுமே நிலைத்து நின்று 80 ரன்களை தாண்டி ஆடி வருகிறார். மறுபுறம் கேப்டன் கோலி, சுப்மன் கில் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் 3 விகெட்டுகள் சரிந்து இந்திய அணி 106 ரன்களை எடுத்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0