இரட்டை சதம் அடித்த ராகுல் டிராவிட் மகன்
14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் இரட்டை சதம் அடித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மண்டலதிற்கு இடையிலான தொடரில் வைஸ்-பிரசிடென்ட் லெவன் (Vice-President’s XI) - தார்வாத் (Dharwad Zone) அணிகள் மோதின.
இதில் ராகுல் டிராவிட் மகன் சமித் வைஸ்-பிரசிடென்ட் லெவன் அணிக்காக விளையாடினார். இவர் 256 பந்தில் 22 பவுண்டரியுடன் இரட்டை சதம் அடித்தார்.
மேலும் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் சேர்த்தார். அத்துடன் மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்.






