6 இளம் இந்திய வீரர்களுக்கு பெரிய கிப்ட் கொடுத்த தொழிலதிபர்!

அவர்களுக்கு சந்தையில் வந்துள்ள தன் கம்பெனியின் புத்தம் புதிய காரை பரிசளிக்க முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

6 இளம் இந்திய வீரர்களுக்கு பெரிய கிப்ட் கொடுத்த தொழிலதிபர்!

ஆஸ்திரேலிய அணியை இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி வீழ்த்தியது. தொடரில் பல அனுபவ வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், ஐந்து வீரர்கள் டெஸ்ட் அணியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சந்தையில் வந்துள்ள தன் கம்பெனியின் புத்தம் புதிய காரை பரிசளிக்க முடிவு செய்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே தொடரில் 20 வீரர்களை பயன்படுத்தியது இந்திய அணி. 

அனுபவ வீரர்கள் பலர் காயத்தால் வெளியேறிய நிலையில் ஷுப்மன் கில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் நடராஜன் என ஐந்து இளம் வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

மேலும் ஷர்துல் தாக்குர் அதற்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனாலும், அந்தப் போட்டியில் முழுமையாக ஆடும் முன்பே காயத்தால் வெளியேறி இருந்தார். 

இந்த ஆறு வீரர்களும் அனுபவ வீரர்கள் இல்லாத குறையை போக்கி இந்திய அணி தொடரில் வெற்றி பெற காரணமாக இருந்தார்கள்.

இந்த ஆறு வீரர்களும் எழுச்சியின் அடையாளம், இவர்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்து இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா தனது நிறுவனத்தின் புதிய வரவான தார் (Thar SUV) எனும் காரை அவர்களுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளார்.

அதிலும் இந்த கார்களை தன் சொந்த செலவில் அளிப்பதாகவும், நிறுவனத்தின் கணக்கில் கொடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த ஆறு வீரர்களின் செயல்பாட்டை குறிப்பிட்டு அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0