மும்பையை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா

அவரை தொடர்ந்து, மற்றொரு வீரர் சூசை ராஜ் 43வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது.

மும்பையை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா

10 அணிகள் இடையிலான 6ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் பிரனாய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

அவரை தொடர்ந்து, மற்றொரு வீரர் சூசை ராஜ் 43வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 2-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், மும்பை அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இறுதியில், கொல்கத்தா அணி 2-0 என்ற கணக்கில் மும்பை சிட்டி எப. சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம், கொல்கத்தா அணி தான் ஆடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 21 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

மும்பை அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்து 16 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.