இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம்

சிகிச்சை முடிந்து நல்ல உடல் நிலையில் இருக்கும் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதயத்தில் அடைப்பு.. கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் அதிரடி நீக்கம்

பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி நடித்து வந்த சமையல் எண்ணெய் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து நல்ல உடல் நிலையில் இருக்கும் கங்குலி நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டது. இதயத்தில் உள்ள குழாய்களில் மூன்று இடங்களில் இவருக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நீக்குவதற்காக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவருக்கு அடைப்பு நீக்கப்பட்ட நிலையில் தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார். இவருக்கு மேலும் ஒரு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இன்னும் சில நாட்கள் கழித்து செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் கங்குலி நடித்து வந்த சமையல் எண்ணெய் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அந்த சமையல் எண்ணெய் விளம்பரத்தில் கங்குலி இதய ஆரோக்கியம் குறித்து பேசி இருப்பார். இந்த எண்ணெயை உபயோகியுங்கள், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதைத்தான் நானும் பயன்படுத்துகிறேன், நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கங்குலி அதில் குறிப்பிட்டு இருப்பார்.

தற்போது அதே கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த எண்ணெய் நிறுவனம் கங்குலியின் விளம்பரத்தை நீக்கி உள்ளது. 

மாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை வைத்து இதய ஆரோக்கியம் குறித்து விளம்பரம் செய்வது முரணாக இருக்கும் என்பதால் அந்த எண்ணெய் நிறுவனம் இந்த விளம்பரத்தை நீக்கி உள்ளது.