ஷரபோவாவிடம் கேரள ரசிகர்கள் மன்னிப்பு... பரிதாபமான நிலையில் சச்சின்

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. 

ஷரபோவாவிடம் கேரள ரசிகர்கள் மன்னிப்பு... பரிதாபமான நிலையில் சச்சின்

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் கேரள சேட்டன், சேச்சிகள் வகை வகையாக, டிசைன் டிசைனாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்னத்த சொல்ல போங்க... இந்தியாவே 'கிரிக்கெட்டின் கடவுள்'-னு கொண்டாடிய மனுஷன் சச்சின் டெண்டுல்கர். இத்தனை ஆண்டுகளாக களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இம்மியளவுக்குக் கூட தன் மீதான இமேஜுக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆனால், சச்சின் எனும் பிராண்ட்டை அவரது ஒற்றை டீவீட் ஒட்டுமொத்தமாக காலி செய்திருக்கிறது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா, இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. 

உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், பங்கேற்க முடியாது. இந்தியாவில் உள்ளவர்களுக்கே இந்தியாவைப் பற்றி தெரியும். இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.

சச்சின் டீவீட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. சச்சின் போன்றவர்கள் இதற்கு முன்பே விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தால், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட போகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இது ஒருபுறமிருக்க, கடந்த 2014 ஆண்டு ரஷ்யாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிடம் சச்சின் குறித்து கேட்டதற்கு 'அவரை எனக்கு தெரியாது' என்று பதில் அளித்திருந்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் ஷரபோவாவின் சமூக தள பக்கங்களில் கடும் எதிர்வினையாற்றினார். யார் ஷரபோவா? எனும் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது.

குறிப்பாக, கேரள ரசிகர்கள் ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்தில் அவர் 'விட்ருங்க டா' என்ன என்று சொல்லும் அளவுக்கு தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர். ஆனால், இப்போது விவசாயிகள் போராட்டம் குறித்த சச்சின் டீவீட்டை தொடர்ந்து, அதே கேரள ரசிகர்கள் விதவிதமாக ஷரபோவாவிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0