இந்தியா மட்டும் இறுதி போட்டியில் ஜெயித்தால்.. பாராட்டித் தள்ளிய சோயப் அக்தர்!

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் வரலாற்றில் அது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். இதில் இந்தியா வென்றால் இந்தியா ஆடியதிலேயே அருமையான டெஸ்ட் தொடராக இருக்கும் என்றார்.

இந்தியா மட்டும் இறுதி போட்டியில் ஜெயித்தால்.. பாராட்டித் தள்ளிய சோயப் அக்தர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினால் அது மாபெரும் வெற்றியாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறி உள்ளார்.

மூன்றாவது போட்டியில் 131 ஓவர்கள் பேட்டிங் செய்து டிரா செய்த பின், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியையும் வென்றால், இந்த தொடர் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும் என்றார்.

இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளின் முடிவில் 1 - 1 என சமநிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் அந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இது பற்றி பேசிய சோயப் அக்தர், இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்தியா வெல்லும் என நான் நினைக்கிறேன். ஆனால், அவர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்வார்கள். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணியின் பலம் அதிகம். அவர்கள் இந்த தொடரை வெல்வார்கள் என்றார்.

இந்த இடத்தில் இருந்து இந்தியா தொடரை வென்றால் அது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் வரலாற்றில் அது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். இதில் இந்தியா வென்றால் இந்தியா ஆடியதிலேயே அருமையான டெஸ்ட் தொடராக இருக்கும் என்றார்.

இந்த தொடரில் இந்தியாவை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் நிறைய தைரியத்தை காட்டி இருக்கிறார்கள். மொத்த அணியும், சுழற் பந்துவீச்சாளர்கள், பின்வரிசை வீரர்கள், வேகப் பந்துவீச்சாளர்கள், பும்ரா இதில் தன் சக்தியை எல்லாம் கொடுத்துள்ளார். அவர் காயம் அடைந்தாலும் அணியை கைவிடவில்லை என்றார் அக்தர்.