இலங்கை வந்துள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கொரோனா  தொற்று உறுதியானது

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வந்துள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கொரோனா  தொற்று உறுதியானது

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக, மொயின் அலிக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் எதிர்வரும் 14 மற்றும் 22ம் திகதிகளில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்றைய தினம் இலங்கைக்கு வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.