டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா...  வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! 

காபா டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா 328 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா...  வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
காபா டெஸ்ட் போட்டியின் 5 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா 328 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். ஆனால் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா ஆஸி பவுலர்களின் பந்துவீச்சை பொறுமையுடன் விளையாடினார். புஜாராவும், சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

ஆனால் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே அதிரடி காட்டினாலும் 22 ரன்களில் அவுட்டானார். 

ஆனால் தொடர்ந்து ரிஷப் பன்ட் மற்றும் புஜாரா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 56 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 9 ரன்களில் மயங்க் அகர்வால் அவுட்டானதையடுத்து இந்தியாவின் சேஸிங் கனவு தகர்ந்தது. இதனையடுத்து ரிஷப் பன்ட் உடன் வாஷிங்டன் சுந்தர் இறுதிக் கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். 

இதனால் இந்தியாவின் வெற்றி நெருக்கத்தில் சென்றது. இந்த இருவருமே இந்தியாவின் வெற்றியை வசமாக்குவார்கள் என நினைத்த நிலையில் சுந்தர் 22 ரன்களில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று அவுட்டானார். ஆனால் இறுதிவரை நிலைத்து நின்றும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை வெற்றிப்பெற வைத்தார்.

ரிஷப் பன்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்து இந்தியா வெல்ல உதவினார். இதனையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதனைப்படைத்தது.