கடைசி நேரத்தில் காணாமல் போன சிஎஸ்கேவின் முக்கிய வீரர்.. அதிர வைக்கும் பின்னணி!

கொரோனா பயோ பபுள் காரணமாக இங்கிலாந்து அணிக்குள் ரொட்டேஷன் பாலிசி கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள்

கடைசி நேரத்தில் காணாமல் போன சிஎஸ்கேவின் முக்கிய வீரர்.. அதிர வைக்கும் பின்னணி!

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டிய இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் திடீரென விமானத்தில் ஏறாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி வெளியேறி இருக்கிறார். பிரைஸ்டோ போன்ற மூத்த வீரர்கள் மீண்டும் இங்கிலாந்து அணிக்குள் வந்துள்ளனர்.

கொரோனா பயோ பபுள் காரணமாக இங்கிலாந்து அணிக்குள் ரொட்டேஷன் பாலிசி கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் சாம் கரன் ஆட வேண்டும்.

ஆனால் இந்தியாவிற்கு விமானம் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்தியா வரும் முடிவை அவர் மாற்றி உள்ளார். இந்தியா செல்லவில்லை. மீண்டும் பயோ பபுளில் இருக்க முடியாது என்று கூறி சாம் கரன் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் .

இவர் ஐபிஎல் தொடரில் ஏப்ரல் மாதம் சிஎஸ்கேவிற்காக கலந்து கொள்ள விரும்புகிறார். இப்போது இந்தியா வந்தால் தொடர்ந்து ஜூன் மாதம் இறுதிவரை ஐபிஎல் தொடரில் பயோ பபுளில் இருக்க வேண்டும். இதை தவிர்க்க வேண்டும் என்று சாம் கரண் கடைசி நேரத்தில் முடிவை மாற்றி உள்ளார்.

இதேபோல் ஜோஸ் பட்லர், மொயின் அலி போன்ற வீரர்களும் கூட இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். ஐபிஎல் தொடரை காரணம் காட்டி இவர்களும் பயோ பபிளில் இருக்க விருப்பம் இன்றி இங்கிலாந்துக்கு திரும்பி உள்ளனர்.