வெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்

மழை நேரத்தில் பிட்சை பாதுகாக்க பிசிசிஐ தவறியதால் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதனால் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த கவுஹாத்தி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

வெளிச்சக் கீற்றுடன் வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறவிருந்த இந்தியா -இலங்கை இடையிலான முதல் சர்வதேச டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

ஆட்டம் துவங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. ஆயினும் போட்டியை காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், தங்கள் கைகளில் இருந்த செல்போன் விளக்குகளை எரியவிட்டு, வந்தே மாதரம் பாடலை பாடியது சிலிர்ப்பை ஏற்படுத்தியது. 

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0