பிரித்வி ஷாவின் அதிரடி... மும்பை அணி அரையிறுதிக்கு போயாச்சு!

அணியின் கேப்டன் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

பிரித்வி ஷாவின் அதிரடி... மும்பை அணி அரையிறுதிக்கு போயாச்சு!

விஜய் ஹசாரே கோப்பை தொடர் காலிறுதியை அடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின.

இதில் சௌராஷ்டிரா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை கேப்டன் பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி நடைபோட செய்தார். அணியின் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக விளையாடினார்.

இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்து வரும் வெள்ளிக்கிழமை டி20 தொடர் துவங்கவுள்ளது. இதனிடையே, விஜய் ஹசாரே ஒருநாள் தொடரும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அரையிறுதி சுற்றில் நடைபோட்டு வருகிறது.

இன்றைய மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையிலான காலிறுதிப்போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

அணியின் கேப்டன் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இது மும்பை அணியின் 6வது தொடர் வெற்றியாகும். முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி 285 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் விக்கெட் விழுவதற்கு முன்னதாகவே அந்த அணி 200 ரன்களை குவித்திருந்தது.

கேப்டன் பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்களை அடித்து அதகளம் செய்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸ்கள் என்று தெறிக்க விட்டார். இந்த தொடரில் பிரித்வி ஷாவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 589 ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் மற்றும் 2 சதங்களும் அடக்கம்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0