நடராஜனை விடாமல் ஊக்குவிக்கும் 4 பேர்.. யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!

நடராஜன்தான் ஆட்டநாயகன் ஆக வேண்டும். அவரின் எளிமை எனக்கு பிடித்து இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறும் அளவிற்கு இவர்கள் நெருக்கம் ஆகிவிட்டனர்.

நடராஜனை விடாமல் ஊக்குவிக்கும் 4 பேர்.. யாருன்னு பார்த்தா அசந்து போயிடுவீங்க!

இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜனை அணிக்குள் இருக்கும் 3 முக்கியமான வீரர்களும், பயிற்சி குழுவில் இருக்கும் ஒருவரும் தொடரும் ஊக்குவித்து வருகிறார்கள் .

இந்திய அணியில் ஆடி வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். இவர் விளையாடிய மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இதற்கு இவரின் பவுலிங் முக்கிய காரணம் ஆகும். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட், அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

இந்த நிலையில் நடராஜனை அணிக்குள் இருக்கும் 3 முக்கியமான வீரர்களும், பயிற்சி குழுவில் இருக்கும் ஒருவரும் தொடரும் ஊக்குவித்து வருகிறார்கள். அதன்படி அணியில் இருக்கும் பாண்டியா இவரை தொடர்ந்து ஊக்குவிக்கிறார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர்.

நடராஜன்தான் ஆட்டநாயகன் ஆக வேண்டும். அவரின் எளிமை எனக்கு பிடித்து இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியா கூறும் அளவிற்கு இவர்கள் நெருக்கம் ஆகிவிட்டனர். நடராஜனுக்கு தொடர்ந்து பாண்டியா ஊக்கமளித்து பேசி வருகிறார். நன்றாக ஆடுங்கள் என்று அறிவுரை வழங்கி வருகிறார்.

இன்னொரு பக்கம் நடராஜன் மீது விராட் கோலி பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். நடராஜன் சிறப்பாக ஆடுகிறார். எதிர்காலத்தில் பெரிய அளவில் இவர் உருவெடுப்பார் என்று கோலி பாராட்டி வருகிறார். இதுபோக நடராஜனுக்கு முடிந்த அளவு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்திலும் கோலி இருக்கிறாராம், பயிற்சிலும் இவர் உதவியாக உள்ளார் .

இதெல்லாம் போக பும்ராவும் நடராஜனை தூக்கி வைத்து கொண்டாடுகிறார். நடராஜனை போட்டியாக பார்க்காமல் தனக்கு சிறந்த ஜோடியாக பும்ரா நினைக்கிறார். தன்னுடைய இடத்தை யாரும் காலி செய்ய முடியாது என்று பும்ராவிற்கு தெரியும். இதனால் நடராஜன் உடன் நெருக்கமாகி அனுபவங்களை பும்ரா பகிர்ந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள் எல்லோருடனும் நடராஜன் நெருக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளார்.

இதெல்லாம் போக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ராமகிருஷ்னன் ஸ்ரீதர் நடராஜனை வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறார். நடராஜனுக்கு மிகுந்த ஆதரவாக அவர் உள்ளார். அதோடு நடராஜன் இந்திய தெரியாமல் கஷ்டப்படுவதை தவிர்க்கும் வகையில் ஸ்ரீதர்தான் உடன் இருக்கிறார். நடராஜனுக்கு ஒரு நல்ல வழிகாட்டி போல ஸ்ரீதர் செயல்பட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0