கேப்டன் பொறுப்புன்னா சும்மா கிடையாது.. அடி உதை வாங்கிய ரஹானே.. அதிர வைத்த கோச்!

அந்தப் போட்டியில் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிய அவர் சதம் அடித்து முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்க காரணமாக இருந்தார்.

கேப்டன் பொறுப்புன்னா சும்மா கிடையாது.. அடி உதை வாங்கிய ரஹானே.. அதிர வைத்த கோச்!

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

அந்த வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம் கேப்டனாக செயல்பட்ட அஜின்க்யா ரஹானே தான்.

அந்தப் போட்டியில் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடிய அவர் சதம் அடித்து முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைக்க காரணமாக இருந்தார்.

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன இந்திய அணி அடுத்த போட்டியில் விராட் கோலியும் இல்லாத நிலையில் மோசமாக தோல்வி அடையும் என எதிர்பார்த்த ஆஸ்திரேலிய அணிக்கு ரஹானேவின் பேட்டிங் மட்டுமின்றி, கேப்டன்சி சமாளிக்க முடியாதவையாக இருந்தது.

ரஹானே கேப்டன்சியில் கலக்கினார். இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் எப்படி தயார் ஆனார்? என்பதை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே கூறி உள்ளார். 

பிரவீன் ஆம்ரே கூறுகையில், ரஹானே தாமாகவே பயிற்சிகளை மேற்கொண்டார். த்ரோ டவுன் செய்பவர்களை தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் வீசச் செய்து பயிற்சி செய்தார். 

மிகக் குறுகிய நேரத்தில் பந்தை சந்திக்க அவர் பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவர் உடலிலும் பந்து தாக்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அப்படித் தான் ஆடியாக வேண்டும் என்பதை அவர் உணர்ந்து இருந்தார் என்றார்.

இத்தனை கடுமையாக உழைத்த ரஹானே கேப்டனாக பொறுப்பான இன்னிங்க்ஸ் ஆடி சதம் அடித்தார். அது அவரது 12வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே முக்கிய பங்காற்ற வேண்டும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0