மிகப்பெரிய சாதனை.. தமிழக வீரர் அஸ்வின்.. இதுமட்டும் நடந்தது.. அப்பறம் கெத்துதான்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முதல் டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட் எடுத்த நிலையில் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகளில் அஸ்வின் 17 விக்கெட் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மொத்தமாக 394 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்தால் இவர் 400 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிவார். 400 விக்கெட் எடுத்த நான்காவது இந்திய டெஸ்ட் வீரர் என்ற அஸ்வினுக்கு கிடைக்கும்.
இதுவரை கும்ப்ளே 619. கபில் தேவ் 434, ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அஸ்வின் இதே சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. இந்த தொடரில் இன்னும் அதிக விக்கெட் எடுத்தால் அஸ்வின் ஹர்பஜனின் 417 விக்கெட் சாதனையைய் முறியடிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன் 800 விக்கெட் எடுத்துள்ளார்.ஷேன் வார்னே 708 விக்கெட் எடுத்துள்ளார். அஸ்வின் இதே பார்மில் சென்றால் இவர்களின் ரெக்கார்டுகளை இன்னும் சில வருடங்களில் முறியடிக்க வாய்ப்புள்ளது