இந்த வித்தையெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்குங்க.. கிழித்து தொங்கவிட்ட பிரக்யான் ஓஜா!

எல்லோருக்கும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் மோசமாக நடந்து கொள்வார்கள் என தெரியும். இந்திய அணியில் ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியா நன்றாக ஆடுகிறது.

இந்த வித்தையெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்குங்க.. கிழித்து தொங்கவிட்ட பிரக்யான் ஓஜா!

இந்திய அணியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி களத்துக்கு வெளியே இந்திய அணியை நிலைகுலைய வைக்க முயன்று வருவதாக பிரக்யான் ஓஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய நினைக்கிறது என இந்திய அணிக்கு தெரியும் எனவும் அவர் நெத்தியடியாக கூறி உள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, முகமது ஷமி ஆடிய நிலையில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அடுத்த போட்டியில் விராட் கோலி விடுப்பில் சென்றார், ஷமிக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை எதிர்பார்க்காத ஆஸ்திரேலியா, தாங்கள் நினைத்தது போல எளிதாக வெல்ல முடியவில்லையே என்ற எண்ணத்தில், இந்திய அணிக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் பயோ பபுள் விதிகளை இந்திய அணி பின்பற்றவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக கூறி இருக்கிறார் முன்னாள் வீரர்பிரக்யான் ஓஜா.

"எல்லோருக்கும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் மோசமாக நடந்து கொள்வார்கள் என தெரியும். இந்திய அணியில் ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் இந்தியா நன்றாக ஆடுகிறது. இந்தியா வென்றதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை." என்றார்.

மேலும், ஆஸ்திரேலியா அணி மீது இருக்கும் அழுத்தத்தை மறைத்து இந்திய அணிக்கு எதிராக அதை திருப்பும் முயற்சி என இதை நினைக்கிறேன். 

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இந்திய அணிக்கு தெளிவாக தெரியும் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்திய வீரர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். கடைசி 2 டெஸ்டில் அவர்கள் கவனம் உள்ளது என்றார் ஓஜா.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0