திரும்பி வந்துட்டேனு சொல்லு.... ப்ளூ ஜெர்ஸியுடன் இணைய வரும் சஞ்சு சாம்சன்

இந்திய வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்ய பிசிசிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாக யோயோ ஃபிட்னெஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது.

திரும்பி வந்துட்டேனு சொல்லு.... ப்ளூ ஜெர்ஸியுடன் இணைய வரும் சஞ்சு சாம்சன்

பிசிசிஐ நடத்திய யோயோ உடற்தகுதி தேர்வில் சஞ்சு சாம்சன் தேர்ச்சி பெற்றுள்ளதால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்திய வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்ய பிசிசிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாக யோயோ ஃபிட்னெஸ் டெஸ்ட் நடத்தப்படுகிறது.

இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வீரர்கள் இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்நிலையில் சஞ்சு சாம்சனுடன் சேர்த்து 6 வீரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிவரும் இந்திய அணி, அடுத்ததாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் உலகக்கோப்பை டி20 தொடரிலும் ஆடவுள்ளது. அதற்காக தகுதியாக வீரர்களை தேர்ந்தெடுக்க உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் உடற்தகுதி தேர்வுக்கு 20 வீரர்கள் அழைக்கப்பட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் பந்துவீச்சாளர்கள் 2 கி.மீ தொலைவை 8 நிமிடம் 15 நொடிகளில் ஓட வேண்டும். பேட்ஸ்மேன்கள் 2 கிமீ தொலைவை 8 நிமிடம் 30 நொடிகளில் ஓட வேண்டும்.

இந்த உடற்தகுதி தேர்வில் முதலில் சஞ்சு சாம்சன் தோல்வி அடைந்த நிலையில், இன்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அவருடன் சேர்த்து, இஷன் கிசான், உனத்கட், சித்தார்த் கெயில் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதால் சஞ்சு சாம்சன், இங்கிலாந்துடனான ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் விளையாட அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டி20 போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்பதால் அதில் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம்