இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபாதையிலிருந்து மீண்டு வருகிறார் வோனர்!

தற்போது அவர் உடல்நிலை சீராகி வருவதாகவும், இதனால் அவரை தொடரில் இணைப்பதென்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் உபாதையிலிருந்து மீண்டு வருகிறார் வோனர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் டேவிட் வோனரும் பெயரிடப்பட்டுள்ளார். உபாதையிலிருந்த அவர் அதிலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில் டேவிட் வோனர் உபாதைக்குள்ளானார். இதனால் சர்வதேச ஒருநாள் தொடரின் கடைசி போட்டியையும், சர்வதேச இருபது20 தொடரையும் இழந்தார்.

டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. உபாதையால் காணப்பட்ட பாரதூரமான நிலைமையைக் கொண்டு அவருக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை.

என்றாலும், தற்போது அவர் உடல்நிலை சீராகி வருவதாகவும், இதனால் அவரை தொடரில் இணைப்பதென்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

நட்சத்திர வீரர்கள் இன்மையால் டேவிட் வோனரின் வருகை அவுஸ்திரேலிய அணிக்கு பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றார்கள். டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0