அணி சூப்பரா செயல்பட்டுக்கிட்டு இருக்கு... மகிழ்ச்சியா இருக்கு... பிரித்வி 

டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிக ஸ்கோர் அடித்த வீரர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த இடத்தில் 179 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் பிரித்வி உள்ளார். 

அணி சூப்பரா செயல்பட்டுக்கிட்டு இருக்கு... மகிழ்ச்சியா இருக்கு... பிரித்வி 

ஒவ்வொரு தளத்திலும் அனைத்து செயல்பாடுகளையும் டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அதன் துவக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக துவக்கத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி செய்துள்ளதாகவும் இது இப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிக ஸ்கோர் அடித்த வீரர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த இடத்தில் 179 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் பிரித்வி உள்ளார். 

கடந்த திங்கட்கிழமை ஆர்சிபிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி மோதிய போட்டியில் 23 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் துவக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா. 
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்கம் சிறப்பாக உள்ளதாகவும் இது இப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லி கேபிடல்ஸ் அணி ஒவ்வொரு தளத்திலும் அனைத்து செயல்பாடுகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வலைபயிற்சியில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும் மைதானத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.