ஸ்டோக்ஸ் இணைந்தால் ஆயிட்டா அணி இன்னும் சூப்பரா ஆயிடும்.. கேப்டன் நம்பிக்கை

6 நாட்கள் குவாரன்டைன் காலத்திற்கு பிறகு அவர் அணியில் இணையவுள்ள நிலையில், இதுகுறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸ் இணைந்தால் ஆயிட்டா அணி இன்னும் சூப்பரா ஆயிடும்.. கேப்டன் நம்பிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கூடிய விரைவில் அணியில் இணையவுள்ளதாக அந்த அணி தெரிவித்துள்ளது.

தன்னுடைய தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்து விளையாடாமல் இருந்த ஸ்டோக்ஸ் தற்போது யூஏஇ வந்துள்ளார்.

6 நாட்கள் குவாரன்டைன் காலத்திற்கு பிறகு அவர் அணியில் இணையவுள்ள நிலையில், இதுகுறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை தந்துள்ளது. ஆயினும் கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாட முயன்றும் தோற்றுள்ளது. 

இந்நிலையில் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அந்த அணியில் இணைந்து ஆடவுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கென யூஏஇ வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் 6 நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகு போட்டிகளில் இணைந்து ஆடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய தந்தையின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது இணையவுள்ளார்.

அணியில் ஏற்கனவே ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மற்றும் டாம் குர்ரான் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது இவரது வரவு அணிக்கு மேலும் வலிமையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், குடும்பத்தினரை பிரிவது வருத்தம் அளிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பென் ஸ்டோக்ஸ் தரமான வீரர் என்றும் அவரது வரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளையொட்டி கடந்த மாதத்தில் நியூசிலாந்திலேயே ஸ்டோக்ஸ் தன்னுடைய பயிற்சிகளை துவக்கியது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0