சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு மழையில் இந்திய அணி

அஸ்திரேலியாவுக்கு எதிரான பொக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஈட்டிய வெற்றிக்கே இந்தப் பாராட்டை சச்சின் வெளியிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் பாராட்டு மழையில் இந்திய அணி

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, இஸான் சர்மா, மொஹமட் சமி ஆகிய முக்கிய நான்கு வீரர்கள் இல்லாமல் பெற்ற இந்த வெற்றி அபாரமான சாதனை என முன்னாள் நட்சத்திரமான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இந்திய டெஸ்ட் அணியை பாராட்டியுள்ளார்.

அஸ்திரேலியாவுக்கு எதிரான பொக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஈட்டிய வெற்றிக்கே இந்தப் பாராட்டை சச்சின் வெளியிட்டுள்ளார்.

முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்றும் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இது அபாரமான வெற்றி எனவும், அணியின் ஒட்டுமொத்த முயற்சி என்றும் அணித்தலைவர் ரஹானேவும், அணி வீரர்களும் இதனைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது எனவும் அணித்தலைவர் விராத் கோஹ்லி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனைவிக்கு தலைப்பிரசவம் நடைபெறுவதால் அணித்தலைவர் விராத் கோஹ்லி அவுஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0