ஆசிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டியில் மோதும் உல்சன் – பெர்செபோலிஸ் அணிகள் 

இந்த போட்டித் தொடரில், உல்சன் அணி  நவம்பர் முதல் 23 நாட்களில் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் லீக் : இறுதிப்போட்டியில் மோதும் உல்சன் – பெர்செபோலிஸ் அணிகள் 

வரலாற்றில் மிக நீளமான கால்பந்து தொடரான ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டி நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த போட்டித் தொடரில்  இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. 

இதில் லீக் மற்றும் அரையிறுதிச்சுற்றுகளின் முடிவில், தென் கொரியாவின் உல்சன் ஹோராங்- ஈரானின் பெர்செபோலிஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து நாளை கத்தார் தலைகநகர் தோஹாவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன.

கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதன்பின் 6 மாத இடைவெளிக்கு பிறகு செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டிள்ளது. மேலும் செப்டம்பர் 14-ந் தேதி முதல் தொடங்கிய போட்டிகளில் கொரோனா உயிர்பாதுகாப்பு அமைப்பில் நடத்தப்பட்டது.

இந்த போட்டித் தொடரில், உல்சன் அணி  நவம்பர் முதல் 23 நாட்களில் எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுகிழமை (டிசம்பர் 13) அரையிறுதி ஆட்டத்தில், ஜப்பானின் விஸ்ஸல் கோபியை எதிர்த்து விளையாடிய உல்சன் அணி 2-1 என்ற அரையிறுதி வெற்றி, பெற்றது. இதன் மூலம் கத்தார் தலைநகர் தோஹாவில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்து சாதித்துள்ளது.

கடந்த இரண்டு சீசன்களின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பை இழந்த, உல்சன் 2020 –ல் அசத்தலாக விளையாடி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் தவறவிட்ட கோப்பையை இந்த சீசனில் வெல்ல வேண்டும் என்று உல்சன் அணி தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 2012 –ம் ஆண்டு ஆசிய பட்டத்தை உல்சன் அணி கைப்பற்றியது.

இது குறித்து உல்சன் பயிற்சியாளர் கிம் டோ-ஹூன் கூறுகையில், “நாங்கள் இங்கு வருவதற்கு முன்பு, எங்கள் அணியில் மன உறுதியும் குறைவாக இருந்தது, ஏனெனில் நாங்கள் ஏற்கனவே உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டு முறை பட்டங்களை இழந்துள்ளோம். “ஆனால் தற்போது நாங்கள் இங்கு வந்த பிறகு வீரர்கள் இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகின்றனர். நாங்கள் ஒரு அணியாக இணைந்து  பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

2020 கே-லீக் சீசனில் அதிக கோல் அடித்த ஜூனியர் நெக்ராவ், இந்த சீசனில் தான் களமிறங்கிய போட்டிகளில் ஐந்து முறை கோல் அடித்துள்ளார். இதில் கடைசியாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இரண்டு கோல்களையும் அடித்தார்.