தமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர வைக்கும் பின்னணி

கொல்கத்தா அணியில் இந்த முறை 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆவார்.

தமிழக வீரர்தான் வேணும்.. உறுதியாக சொன்ன அணி நிர்வாகம்..அதிர வைக்கும் பின்னணி

2021 ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நாளை மோதல் நடக்கிறது.

இந்த முறை கொரோனா காரணமாக எந்த அணிக்கும் ஹோம் மைதானம் கிடையாது. ஒவ்வொரு அணியும் கிரிக்கெட் போட்டிகளை வெவ்வேறு மைதானத்தில் ஆட உள்ளது. சென்னைக்கும் இந்த முறை ஹோம் மைதானம் கிடையாது.

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஒருவர் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் இந்த முறை 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். இவர் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆவார்.

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணிக்காக இவர் சிறப்பாக ஆடினார். தமிழக அணி ஆடிய போட்டிகளில் இவர் பினிஷர் போல செயல்பட்டார். சையது முஷ்டாக் தொடரில் தமிழக அணி தோல்வி அடையும் என்று கருதிய போட்டியில் கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டி வெற்றிபெற வைத்தார்.

குறைந்த பந்தில் மேட்சை மாற்றுவதுதான் இவரின் டெக்னீக். பாண்டியா, பண்ட் போல முதல் பாலில் இருந்து அதிரடியாக ஆடி சிறப்பான ஸ்டிரைக் ரேட் வைத்து இருப்பதுதான் ஷாருக்கானின் டெக்னீக் ஆகும். கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் இப்படி ஆட கூடிய வீரர்கள் யாரும் இல்லை.

கொல்கத்தா அணியில் ரசல் இருந்தாலும் அவர் பெரிய அளவில் பார்மில் இல்லை. அதேபோல் ராணாவும் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த முறை ராணாவிற்கு பதிலாக, அல்லது ராணாவிற்கு அடுத்து ஷாருக்கான் களமிறங்குவார் என்கிறார்கள். கண்டிப்பாக ஷாருக்கான் பேட்டிங் செய்வார் என்று கூறப்படுகிறது.

ஷாருக்கானை கண்டிப்பாக களமிறக்க வேண்டும் என்ற முடிவில் கொல்கத்தா அணி நிர்வாகம் இருக்கிறது. இவருக்காக ராணாவை ஓரம்கட்ட கூட வாய்ப்பு உள்ளதாம். இதுவரை நடந்த பயிற்சி ஆட்டங்களிலும் இவர் சிறப்பாக ஆடி உள்ளாராம். இவரின் பேட்டிங் பார்த்து கேகேஆர் அணி நிர்வாகம் ஆடிப்போய் உள்ளது.

ரசல் போலவே பேட்டிங் ஸ்டைல் கொண்டு இருப்பதால் இவர்கள் அடுத்தடுத்து கொல்கத்தா அணியில் பேட்டிங் இறங்க வாய்ப்புள்ளது. மொத்தமாக அணி நிர்வாகத்தை போகசை ஷாருக்கான் தன் பக்கம் திருப்பி உள்ளார். இவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0