வாய்ப்பே கொடுக்கல.... சொந்த நாட்டுக்கு கிளம்பிய நட்சத்திர பவுலர்...

இப்போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை சமன் செய்ய முடியும் நிலையில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் கிறிஸ் வோக்ஸ் சொந்த நாட்டிற்கு கிளம்பிவிட்டார்.

வாய்ப்பே கொடுக்கல.... சொந்த நாட்டுக்கு கிளம்பிய நட்சத்திர பவுலர்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 -1 என முன்னிலையில் உள்ளது. 4ஆவது மற்றும் கடைசி போட்டி வரும் மார்ச் 4ஆம் திகதி நடக்கவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை சமன் செய்ய முடியும் நிலையில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் கிறிஸ் வோக்ஸ் சொந்த நாட்டிற்கு கிளம்பிவிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அடுத்த 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இதனால் தொடரில் 2 -1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்பின்னர்கள் மிரட்டிய நிலையில் இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு ஸ்பின்னர் மட்டுமே இருந்தார். 

குறிப்பாக அனுபவம் வாய்ந்த மொயின் அலி ஆட்டத்தில் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இங்கிலாந்து அணியில் கடந்த சில காலமாக ரோடேஷன் பாலிசி கடைபிடிக்கப்படுகிறது. இதனால் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்தவகையில் இந்தியாவுடனான தொடரில் பேர்ஸ்டோ, மொயின் அலி, ஆண்டர்சன் ஆகியோ மாற்றிவிடப்பட்டனர்.

நட்சத்திர விரர் கிறிஸ் வோக்ஸ், கடந்த தென்னாப்பிரிக்க, இலங்கை, இந்தியா தொடர்களில் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு எந்த ஒரு தொடரிலும் 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ரொடேஷன் பாலிசி மூலம் 4வது போட்டியில் பங்கேற்காமால் சொந்த நாட்டிற்கு கிளம்பினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 

ஆனால் 3வது டெஸ்டில் தோல்வி அடைந்ததன் மூலம் தொடைரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியுள்ளது. இதற்கு ரொடேஷன் பாலிசியே காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் சாடி வருகின்றனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0