தூது போன வீரர்கள்.. சேப்பாக்கத்தில் கோலி - ரோஹித் இடையே நடந்தது என்ன?

தொடக்கத்தில் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் பெரிதாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் இருந்துள்ளது.

தூது போன வீரர்கள்.. சேப்பாக்கத்தில் கோலி - ரோஹித் இடையே நடந்தது என்ன?

சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணி வீரர்கள் தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்தியா இங்கிலாந்து இடையே வரும் வெள்ளிக்கிழமை நடக்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வெல்லும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.

இரண்டு அணிகளும் மோதும் இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடரை போல விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணி வீரர்கள் தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பின் இவர்கள் பயிற்சியை தொடங்கி உள்ளனர். 

கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கு பின் ரோஹித் சர்மா கோலி இருவரும் இன்று களத்தில் சந்தித்துக்கொண்டனர் . ஐபிஎல் களத்தில் இவர்கள் சந்தித்துக் கொண்டாலும் ஒன்றாக இந்திய அணிக்கு இப்போதுதான் ஆடுகிறார்கள் . உலகக் கோப்பை தொடருக்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளவே இல்லை.

இடையில் ரோஹித் சர்மா காயம், புறக்கணிப்பு, கேப்டன்சி மோதல் என்று கோலி ரோஹித் சர்மா இடையே கசப்பான சம்பவங்கள் நிறைய நடந்தது. இதனால் தொடக்கத்தில் கோலி - ரோஹித் சர்மா ஆகியோர் பெரிதாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் இடையில் சிறிய மனஸ்தாபம் இருந்துள்ளது.

இதனால் தொடக்கத்தில் இளம் வீரர்கள் இவர்களுக்கு இடையே தூது சென்றுள்ளனர். ஆனால் போக போக ரோஹித் சர்மா கோலி சகஜமாக பேசி உள்ளனர். டெஸ்ட் தொடர் குறித்து திட்டங்களை வகுத்துள்ளனர். வலைப்பயிற்சியில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு குறைந்து வருகிறது என்கிறார்கள். இனிமேலும் இவர்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இல்லை. வரும் டெஸ்ட் தொடரில் இவர்களை ஒன்றாக களத்தில் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

like
5
dislike
0
love
1
funny
1
angry
1
sad
0
wow
2