யாரை பார்த்து சொன்னீங்க.. கோலி தொடங்கி மொத்த பிசிசிஐக்கும் முரட்டு பதிலடி!

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஆடி வரும் இளம் வீரர் இஷான் கிஷான். கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

யாரை பார்த்து சொன்னீங்க.. கோலி தொடங்கி மொத்த பிசிசிஐக்கும் முரட்டு பதிலடி!

இந்திய அணியில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இளம் வீரர் இஷான் கிஷான் தற்போது பிசிசிஐ அமைப்பிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு ஆடி வரும் இளம் வீரர் இஷான் கிஷான். கடந்த சில சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

அதிலும் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எந்த இடத்தில் இறங்கினாலும் அதிரடியாக ஆடி மேட்ச் வின்னராக வலம் வந்தார். மும்பை அணி கோப்பையை வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

இவர் முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். இவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் இவருக்கு பதிலாக சஞ்சு, பண்ட் ஆகியோரை கோலி அதிகம் தேர்வு செய்கிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்காக இவர் பெங்களூருக்கு சோதனை செய்ய வரவழைக்கப்பட்டார். அதில் பிட்னஸ் டெஸ்டில் முதல்முறை தோல்வி அடைந்தார். பின் இரண்டாம் முறை வெற்றிபெற்றார்.

இருந்தாலும் இவர் முதல் முறை தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்குள் திரும்புவது கஷ்டம் என்கிறார்கள். தற்போது இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கு திரும்பி உள்ளார். இவர் ரோஹித் சர்மாவிற்கு நெருக்கமான வீரர் என்பதால் கோலி இவரை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னை இப்படி பிசிசிஐ புறக்கணிப்பதால் கோபம் அடைந்த இஷான் கிஷான் இன்று விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அடித்து வெளுத்து இருக்கிறார். ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இருக்கும் இவர் மத்திய பிரதேசத்திற்கு எதிராக மிகவும் சிறப்பாக ஆடி இருக்கிறார். வெறும் 94 பந்தில் 173 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் 19 பவுண்டரி 11 சிக்ஸர்கள் அடக்கம். தன்னை சிறந்த டி 20 மற்றும் ஒருநாள் பேட்ஸ்மேன் என்று ஒரே போட்டியில் நிரூபித்து இருக்கிறார். 

இவரின் அதிரடி ஆட்டம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதனால் இவரை அணிக்குள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி தற்போது தள்ளப்பட்டு இருக்கிறது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0