21ம் நூற்றாண்டோட சிறந்த 50 வீரர்கள்... 2வது இடத்தை பிடித்த விராட் கோலி

டெய்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்களும் வாக்களித்து வீரர்கள் தேர்வில் இடம்பெற்றனர்.

21ம் நூற்றாண்டோட சிறந்த 50 வீரர்கள்... 2வது இடத்தை பிடித்த விராட் கோலி

21ம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான 50 வீரர்கள் பட்டியலில் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

டெய்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்களும் வாக்களித்து வீரர்கள் தேர்வில் இடம்பெற்றனர்.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும், 21வது இடத்தில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் ஐசிசி மேற்கொண்ட 10 ஆண்டுகளுக்கான சிறந்த வீரர், அணி உள்ளிட்ட தேர்வில் இந்திய வீரர்கள் விராட் கோலி,எம்எஸ் தோனி உள்ளிட்டவர்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தனர். சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களின் திறன் இதன்மூலம் வெளிப்பட்டது.

இந்நிலையில் 21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 50 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலை தற்போது டெய்லி டெலிகிராம் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வுக்குழுவினரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் விராட் கோலி தவிர்த்து முதல் 10 இடங்களில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இடம்பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள இடம் 9. ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் தற்போதைய கோச்சுமான ரிக்கி பாண்டிங் 3வது இடத்தையும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக்குவஸ் காலிஸ் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். 5து இடத்தில் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார்.

21ம் நூற்றாண்டில் சர்வதேச அளவில் ரசிகர்களின் மனதில் தங்களின் சிறப்பான ஆட்டத்தால் நீங்காத இடம்பெற்றுள்ள வீரர்களின் இந்த 50 பேர் கொண்ட பட்டியலில் 17வது இடத்தை ராகுல் டிராவிட்டும் 21வது இடத்தை முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியும் பெற்றுள்ளனர்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த பட்டியலில் 20வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் 34வது இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லஷ்மன் 28வது இடத்தை பிடித்துள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே 38வது இடத்திலும், ஜாகிர் கான் 42வது இடத்தையும் வீரேந்திர ஷேவாக் 45வது இடத்தையும் ஹர்பஜன் சிங் 47வது இடத்தையும் ரவி அஸ்வின் 48வது இடத்தையும் இந்த பட்டியலில் பிடித்துள்ளனர். முன்னாள் வீரர்கள் அதிகமானோர் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0