டி 20 கிரிக்கெட்டில்  முதலிடம் பிடிப்பாரா விராட் கோலி?

இலங்கைக்கு எதிராக கவுகாத்தியில் இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

டி 20 கிரிக்கெட்டில்  முதலிடம் பிடிப்பாரா விராட் கோலி?

டி 20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வந்தனர்.

வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா அவரை முந்தினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமையவில்லை. 

இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். கோலி 2,563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2,562 ரன்களுடன் 2-வது இடத்திலும் இருந்தனர்.

அதன்பின்,  மும்பையில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ரோகித் சர்மா 71 ரன்னும், விராட் கோலி 70 ரன்னும் எடுத்தனர். இதனால் இருவரும் 2,633 ரன்கள் எடுத்து சமனிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக கவுகாத்தியில் இன்று முதல் டி 20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0