டிம் பெயின்.. நீங்க தப்பிக்கவே முடியாது.. ஒரு கேப்டன் இப்படி பண்ணலாமா?

அவர் ஐசிசி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு முதற்கொண்டு பலரும் கூறி உள்ளனர்.

டிம் பெயின்.. நீங்க தப்பிக்கவே முடியாது.. ஒரு கேப்டன் இப்படி பண்ணலாமா?

அஸ்வின் பேட்டிங் ஆடிய போது அவரை சீண்டிக் கொண்டே இருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி அவர் வார்த்தைகளை விட்டு விட்டார். கெட்ட வார்த்தையில் அஸ்வினை தரக் குறைவாக பேசினார்.

இதை அடுத்து அவர் ஐசிசி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடு முதற்கொண்டு பலரும் கூறி உள்ளனர்.

சிட்னி டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இந்திய அணியை எளிதாக வீழ்த்தலாம் என திட்டமிட்ட ஆஸ்திரேலிய அணிக்கு ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டமும், புஜாராவின் நிதான அரைசதமும் முதல் அதிர்ச்சியாக இருந்தது.

அவர்கள் விக்கெட்டை வீழ்த்திய பின் காயமுடன் ஆடிய ஹனுமா விஹாரி - அஸ்வின் ஜோடி போட்டியை டிரா செய்ய முற்பட்டு ஆஸ்திரேலிய அணியை சோதித்தது. 
அப்போது அஸ்வினை கோபமூட்டி விக்கெட்டை பறிக்கலாம் என திட்டமிட்ட ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அவர் நிம்மதியாக பேட்டிங் செய்ய முடியாதபடி பேசிக் கொண்டே இருந்தார்.

ஒரு முறை கடைசி டெஸ்ட் போட்டிக்காக தான் காத்திருப்பதாக கூறினார். காரணம், அந்த டெஸ்ட் நடைபெற காபா மைதானத்தில் இந்தியா இதுவரை வெற்றி பெற்றதில்லை. 

அதற்கு பதிலடி கொடுத்த அஸ்வின் நீங்கள் இந்தியா வாருங்கள். அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு ஆடவே மாட்டீர்கள் என்றார்.

அப்போது டிம் பெயின் நீங்கள் ஆஸ்திரேலியாவிலும் தேர்வுக் குழுவில் இருக்கிறீர்களா? என்னை என் அணி வீரர்களுக்காவது பிடிக்கும். எனக்கு இந்திய நண்பர்கள் அதிகம். உங்கள் சக வீரர்களுக்கு கூட உங்களை பிடிக்காது. இல்லையா?" எனக் கூறி ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையில் பேசினார்.

அது மைக்கில் பதிவாகி உள்ளது. ஐசிசி விதிப்படி ஸ்டம்ப் மைக்கில் கெட்ட வார்த்தை பதிவாகும்படி பேசினால் அந்த வீரருக்கு தண்டனை அளிக்கப்படும்.

ஏற்கனவே, அம்பயரை எதிர்த்து பேசி ஒரு டீமெரிட் புள்ளி மற்றும் 15 சதவீத சம்பளத்தை அபராதமாக செலுத்த உள்ளார். தற்போது இந்த சிக்கலிலும் மாட்டிக் கொண்டுள்ளார்.