ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர் 

 ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதியை ஆலோசகராக நியமித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர் 

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடியவர் இஷ் சோதி. 

2020 சீசனுக்கான ஏலத்திற்கு முன் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்தது. ஏலத்தில் எந்த அணியில் இவரை எடுக்கவில்லை.

இந்நிலையில் இஷ் சோதியை சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது. 

இவர் பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே உடன் இணைந்து செயல்படுவார். 

இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.