இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அனுபவ துவக்க வீரருக்கான இடம் காலியாக உள்ளது. பாப் டுபிளெசிஸ், ருதுராஜ் கெயிக்வாட் இருந்தாலும், கூடுதலாக ஒரு வீரர் தேவை.

இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே!

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் யாரை வாங்குவது என அனைத்து அணிகளும் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் மோசமான தோல்வி அடைந்த நிலையில், இந்த முறை யாரை அணியில் தேர்வு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துவக்க வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அனுபவ துவக்க வீரருக்கான இடம் காலியாக உள்ளது. பாப் டுபிளெசிஸ், ருதுராஜ் கெயிக்வாட் இருந்தாலும், கூடுதலாக ஒரு வீரர் தேவை.

ஏலத்தில் சிஎஸ்கே யாரை துவக்க வீரராக வாங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்துள்ள நிலையில், அவரை சிஎஸ்கே அணி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து ஷர்துல் தாக்குர், தீபக் சாஹருக்கு அடுத்ததாக மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் தேவை. அந்த இடத்துக்கு வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்களையே சிஎஸ்கே விரும்பும். 

எனவே, உமேஷ் யாதவ், அங்கித் ராஜ்புத், வருண் ஆரோன் ஆகியோரை சிஎஸ்கே வாங்க முயற்சி செய்யக் கூடும்.

கேதார் ஜாதவ், முரளி விஜய் என இரண்டு பேட்ஸ்மேன்களை விடுவித்துள்ள நிலையில், காயம் ஏற்படும் நிலையில், மாற்று பேட்ஸ்மேன் ஒருவரை அணியில் வைத்திருக்க வேண்டும் என்பதால் அதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவரை ஏலத்தில் வாங்க சிஎஸ்கே முயற்சி செய்யக் கூடும்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0