அமைதியான நடந்த மாற்றம்.. இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் சென்னை.. சம்பவம் இருக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் சென்னையில் நடக்க உள்ள நிலையில், இதற்காக பிட்ச் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.

அமைதியான நடந்த மாற்றம்.. இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் சென்னை.. சம்பவம் இருக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் சென்னையில் நடக்க உள்ள நிலையில், இதற்காக பிட்ச் பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடக்க உள்ளது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் சென்னையில் நடக்க உள்ள நிலையில், இதற்காக பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங், ஸ்பீட் பவுலிங் இரண்டுக்கும் ஒத்துழைக்கும். சென்னை பிட்ச் அவ்வளவு கடினமான பிட்சாக இருக்காது. ஆனால் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பிட்சை முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்ற பிட்சாக மாற்றியுள்ளனர். இந்திய அணிக்கு உதவும் வகையில் முழுக்க பவுலிங் செய்ய வசதியாக இதை மாற்றி உள்ளனர். ஸ்பின் பவுலிங்தான் ஐந்து நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள்.

இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் மிகவும் வலிமையாக உள்ளது. அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகிய பவுலர்கள் இந்திய அணியின் சிறப்பாக ஸ்பின் செய்து வருகிறார்கள். இதனால் இவர்கள்தான் இந்திய அணியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த போகிறார்கள்.

இங்கிலாந்து அணியில் கடந்த இரண்டு வருடமாகவே பெரிய அளவில் ஸ்பின் பவுலர்கள் இல்லை. இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் அவ்வளவு நம்பிக்கை அளிக்க கூடியதாக இல்லை. இதனால் இங்கிலாந்து அணி கண்டிப்பாக சென்னை பிட்சில் திணறும்.

சென்னை பிட்ச் இதனால் இங்கிலாந்து அணிக்கு சிம்ம செப்பமானமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். சென்னை பிட்சில் கண்டிப்பாக இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த முடியாது . அதற்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள்.