நீ என்னை கைவிட்டுட்ட.. இஷாந்த் சர்மாவிடம் உருக்கமாக சொன்ன தோனி.. அஸ்வின் வீடியோவால் வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2013-2014ல் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக ஆடியது. இந்த தொடரில் தோனி கேப்டன்சி மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. 

நீ என்னை கைவிட்டுட்ட.. இஷாந்த் சர்மாவிடம் உருக்கமாக சொன்ன தோனி.. அஸ்வின் வீடியோவால் வெளியான தகவல்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி தனது கடைசி டெஸ்ட் போட்டியில் செய்த காரியம் ஒன்றை குறித்து மூத்த வீரர் இஷாந்த் சர்மா பகிர்ந்து இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்க உள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

இது இரவு பகல் ஆட்டமாக நடக்க உள்ளதால் இன்று பிங்க் பால் பயன்படுத்தப்பட உள்ளது. இன்று இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த் சர்மாவிற்கு 100வது ஆட்டம் ஆகும். 

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன் இஷாந்த் சர்மா பகிர்ந்து விஷயம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2013-2014ல் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக ஆடியது. இந்த தொடரில் தோனி கேப்டன்சி மோசமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. 

இதனால் பாதி தொடரில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு தோனி இந்தியா திரும்பினார்.

இந்த டெஸ்ட் போட்டியில் நடந்த உருக்கமான சம்பவம் ஒன்றை குறித்து இஷாந்த் சர்மா பகிர்ந்து இருக்கிறார். அஸ்வினுக்கு இஷாந்த் சர்மா அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு இருக்கிறார். 

அதில், அந்த போட்டியில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடலில் ஊசி போட்டுகொண்டு நான் பவுலிங் செய்தேன்.

வலி தெரியாமல் இருக்க மரப்பு ஊசி போட்டு இருந்தேன். நான்காவது நாள் ஆட்டத்தில் எனக்கு வலி அதிகமாக இருந்தது. 

அப்போது வலியை தாங்க முடியாமல் தோனியிடம் சென்று, என்னால் பவுலிங் செய்ய முடியாது. இன்று எனக்கு வலி அதிகமாக இருக்கிறது என்று கூறினேன்.

உடனே தோனி, நீ இன்று பவுலிங் செய்ய வேண்டாம் என்று கூறினார். அதன்பின் என்னை கைவிட்டுவிட்டாய் என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

மீண்டும் அவர், என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் நீ என்னை பாதியில் கைவிட்டுவிட்டாய் என்று உருக்கமாக குறிப்பிட்டார். தோனி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.

தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி அதுதான் என்று அவர் குறிப்பிட்டார். எனக்கு அது பெரிய ஷாக்கிங்காக இருந்தது. எனக்கு மட்டுமல்ல எல்லா வீரர்களுக்கும். தோனி அன்று ஓய்வு பெற போகிறார் என்று யாருக்கும் தெரியாது . எல்லோருக்கும் இந்த முடிவு அதிர்ச்சியாக இருந்தது என்று இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.