அவுஸ்திரேலிய வீரரின் தலையை பதம்பார்த்த பும்ராவின் பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டது.

அவுஸ்திரேலிய வீரரின் தலையை பதம்பார்த்த பும்ராவின் பந்துவீச்சு

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்து தலையில் பட்டு தாக்கியதால் அவுஸ்திரேலியாவின் ஏ கிரிக்கெட் அணி வீரரான கெமரூன் கிரீன் காயமடைந்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டது.

சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சார்பாக களமிறங்கிய கெமரூன் கிரீனின் தலையை பந்து தாக்கியதை அடுத்து மைதானத்தில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

அதனையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டதுடன், பின்னர் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். எவ்வாறாயினும், அடுத்த இரண்டு நாட்களும் அவர் விளையாடமாட்டாரென அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெஸ்ட் தொடருக்கான முன்னோடிப் பயிற்சியாக இந்தப் போட்டி நடத்தப்படுவதுடன் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா பெற்ற 194 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0