அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்....என்ன ஒரு ஆட்டம்...கோலியை நுணுக்கமாக விவரித்த வீரர்

இந்நிலையில் அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலியிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை முன்னாள் வீரர் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

அவர்கிட்ட இருந்து கத்துக்கனும்....என்ன ஒரு ஆட்டம்...கோலியை நுணுக்கமாக விவரித்த  வீரர்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியிடம் இருந்து அந்த குறிபிட்ட விஷயங்களை இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலியிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை முன்னாள் வீரர் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பியது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கே.எல்.ராகுல் மீண்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். கடந்த போட்டியில் அசத்திய இஷான் கிஷான் 4 ரன்களுக்கு வெளியேற பண்ட்-ம் 25 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தார்.

ஒரு புறம் விக்கெட்கள் மலமலவென சரிய, மற்றொருபுறம் பொறுப்புடன் ஆடிய கேப்டன் விராட் கோலி பக்காவாக ஒவ்வொருவருடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இந்திய அணி 20 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அணிக்கு உதவினார். இதில் 4 சிக்ஸரும், 8 பவுண்டர்களும் அடங்கும். இதனால் இந்திய அணி 156 ரன்களை குவித்தது. எனினும் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் விவிஎஸ்.லஷ்மண், ஒரு கட்டத்தில் இந்திய அணி 140 ரன்களையாவது எட்டுமா என குழப்பம் இருந்த நிலையில் கோலி அதற்கு விடை கொடுத்தார். 

சேசிங் மாஸ்டர் மீண்டும் தனது ஆட்டத்தை நிரூபித்து விட்டார். மிகவும் கடினமாக சூழலில் இந்திய அணியின் ஸ்கோரை மீட்டு கொண்டு வந்தார். எப்படி கடினமான சூழலில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை கோலியிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

3 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தது. அணிக்கு நிச்சயம் ஒரு பார்ட்னர்ஷிப் தேவை என்பதை கோலி உணர்ந்தார். இதனால் ஸ்கோரை உயர்த்த முதலில் பண்ட் பிறகு பாண்டியா என பயன்படுத்திக்கொண்டார். நிலைமையை உணர்ந்து முதலில் பெரிய ஷாட்களுக்கு செல்லாமல், பிறகு ஸ்ட்ரைக் ரேட்டை அப்படியே மாற்றினார். கோலியை அப்படி பார்த்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.